சைவ சமய திருப்பாடல்களின் தொகுப்பாக விளங்குவது பன்னிரு திருமுறைகள் ஆகும். பன்னிரு திருமுறைகளை தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பி என்பவராவார். 27 நாயன்மார்கள் பாடிய பாடல்களின் தொகுப்பாக பன்னிரு திருமுறைகள் விளங்குகின்றன.
பன்னிரு திருமுறைகள் பாடல் வைப்பு முறை:
பன்னிரு திருமுறைகளில்,
- 1,2,3 -ஆம் திருமுறைகளாக விளங்குவது, திருஞானசம்பந்தர் பாடிய சம்பந்தர் தேவாரம்.
- 4,5,6 -ஆம் திருமுறைகளாக விளங்குவது திருநாவுக்கரசர் பாடிய தேவாரம்.
- 7 -ஆம் திருமுறையாக திருமுறையாக சுந்தரர் பாடிய சுந்தரர் தேவாரம்.
- 8 -ஆம் திருமுறைகளாக விளங்குவது மாணிக்கவாசகர் பாடிய திருவாசகம் மற்றும் திருக்கோவையார்.
- 9-ஆம் திருமுறையாக விளங்குவது 9 நாயன்மார்கள் பாடிய பாடலின் தொகுப்பு.
- 10 - ஆம் திருமுறையாக விளங்குவது திருமூலர் பாடிய திருமந்திரம்.
- 11- ஆம் திருமுறையாக விளங்குவது 12 நாயன்மார்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு.
- 12- ஆம் திருமுறையாக விளங்குவது சேக்கிழார் பாடிய பெரிய புராணம்.
இப்ப பன்னிரு திருமுறை சைவர்களின் 'தமிழ் வேதம்' என அழைக்கப்படுகிறது.
நாயன்மார்களில் சிலர் :
63 நாயன்மார்களில் குறிப்பிடத்தக்கவர்கள்
1. திருஞானசம்பந்தர்,
2. திருநாவுக்கரசர்,
3. சுந்தரர்,
4. மாணிக்கவாசகர்,
போன்றோர் ஆவார்கள்.
1.திருஞானசம்பந்தர்
- 63 நாயன்மார்களில் முதன்மையானவர்,
- ஆளுடைய பிள்ளை என்னும் இயற்பெயரைக் கொண்ட இவர் சீர்காழியில் சிவபாத இருதையாருக்கும் பகவதி அம்மையாருக்கும் மகனாக பிறந்தவர்.
- உமையவளிடம் ஞானப்பால் உண்டு பாடும் வல்லமையைப் பெற்றவர்.
- உமையவளால் பாலை கொடுத்து ஆள் கொள்ள ப்பட்ட இவர், 220 சிவ ஆலயங்களுக்குச் சென்று பாடி உள்ளார்.
- 'திராவிட சிசு 'என அழைக்கப்படும் இவர் பாடிய தேவாரம் முதல் மூன்று திருமுறைகளாக தொகுக்கப்பட்டுள்ளது.
2. திருநாவுக்கரசர்
- மருள்நீக்கியார் என்னும் இயற்பெயரைக் கொண்ட திருநாவுக்கரசர், திருவாமூரில் புகழனார் மாதினி யாருக்கு மகனாகப் பிறந்தார்.
- சிறு வயதில் பெற்றோரை இழந்த இவர் தமக்கை திலகவதி யாரால் வளர்க்கப்பட்டார்.
- தர்ம சேனன் என்ற பெயரில் சமண சமயத்தில் சில காலம் இருந்தார்.
- சிவபெருமானால் சூலை நோய் கொடுத்து ஆள் கொள்ளப்பட்ட இவர் திருநாவுக்கரசர் என அழைக்கப்பட்டார்.
- திருஞானசம்பந்தர் இவரை அப்பர் என அழைப்பார்.
- இவர் பாடிய பாடல்கள் 4,5,6 ஆம் திருமுறைகளாக தொகுக்கப்பட்டுள்ளது.
3. சுந்தரர்
- நம்பியாரூரார் என்னும் இயற்பெயரைக் கொண்ட இவர் திருவாரூரில் சடையனார் இசைஞானி யாருக்கு மகனாகப் பிறந்தார்.
- சிவபெருமானால் ஓலை கொடுத்து ஆட்கொள்ளப்பட்ட இவர் வன்தொண்டர், தம்பிரான் தோழர் எனவும் அழைக்கப்படுகிறார்.
- சுந்தரர் பாடிய பாடல்கள் 7 ஆம் திருமுறைகளாக தொகுக்கப்பட்டுள்ளது.
4. மாணிக்கவாசகர்
- திருவாத ஊரார் என அழைக்கப்படும் இவர், திருவாத ஊரில் சம்பு பாதசாரியார் மற்றும் சிவஞான வதிக்கு மகனாகப் பிறந்தவர்.
- அழுது இறைவன் அடி அடைந்த இவர் பாடிய திருவாசகம் மற்றும் திருக்கோவையார் 8 ஆம் திருமுறையாக விளங்குகிறது.
மேற்கண்ட இவர்களோடு காரைக்கால் அம்மையார், இசைஞானியார், மங்கையர்க்கரசி போன்ற பெண் நாயன்மார்களும் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவார்கள்.
