எனது வலைப்பதிவு பட்டியல்

புதன், 15 அக்டோபர், 2025

4000 திவ்ய பிரபந்தம் - குறிப்பு



    வைணவர்களின் வேதமாக கருதப்படுவது 4000 திவ்ய பிரபந்தம் ஆகும். 12 ஆழ்வார்கள் பாடிய பாடலின் தொகுப்பாக இது விளங்குகிறது.

  •  கி.பி பத்தாம் நூற்றாண்டில் நாதமுனிகள் என்பவர் ஆழ்வார்கள் அருளிய செயல்கள் என்ற பெயரில் தொகுத்தார்.
  • பின்னர் வந்த மணவாள முனிகள் என்பவர் ராமானுஜ நூற்றந்தாதியை சேர்த்து 4000 திவ்ய பிரபந்தம் என்ற பெயரில் தொகுத்தார்.
  •  4000 திவ்ய பிரபந்தம், திராவிட வேதம், திராவிட பிரபந்தம், ஐந்தாவது வேதம், ஆன்ற தமிழ்மறை என அழைக்கப்படுகிறது.
  • 4000 திவ்ய பிரபந்தத்தில் 12 ஆழ்வார்கள் பாடிய 24 பிரபந்தங்கள் இடம் பெற்றுள்ளன.
  •  4000 திவ்ய பிரபந்தம்  1. முதல் ஆயிரம்,2. இரண்டாவது ஆயிரம்,3. மூன்றாவது ஆயிரம்,4. நான்காவது ஆயிரம் என நான்கு பிரிவுகளைக் கொண்டதாகும்.

1. முதலாவது ஆயிரம்
 
   முதலாவது ஆயிரத்தில், பெரியாழ்வார் பாடிய திருப்பல்லாண்டு மற்றும் திருமொழி. ஆண்டாள் பாடிய திருப்பாவை மற்றும் நாச்சியார் திருமொழி,
குலசேகர ஆழ்வார் பாடிய பெருமாள் திருமொழி,
திருமழிசை ஆழ்வார் பாடிய திருச்சந்த விருத்தம்,
தொண்டரடி பொடியாழ்வார் பாடிய திருமாலை மற்றும் திருப்பள்ளி எழுச்சி, திருப்பானாழ்வார் பாடிய அமலனாதிபிரான், மதுரகவியாழ்வார் பாடிய கண்ணிநுண் சிறுதாம்பு  போன்ற பிரபந்தங்கள் இடம் பெற்றுள்ளன.

2. இரண்டாவது ஆயிரம்

இரண்டாவது ஆயிரத்தில் திருமங்கை ஆழ்வார் பாடிய  பெரிய திருமொழி, திருகுறுந்தாண்டகம், திரு நெடுந்தாண்டகம் ஆகிய பிரபந்தங்கள் இடம் பெற்றுள்ளன.

3. மூன்றாவது ஆயிரம்

மூன்றாவது ஆயிரத்தில்  பொய்கையாழ்வார் பாடிய முதல் திருவந்தாதி, பூதத்தாழ்வார் பாடிய இரண்டாம் திருந்தாதி, பேயாழ்வார் பாடிய மூன்றாம் திருவந்தாதி, திருமழிசை ஆழ்வார் பாடிய நான்முகன் திருவந்தாதி,
நம்மாழ்வார் பாடிய திரு விருத்தம், திருவாசியம், பெரிய திருவந்தாதி,
திருமங்கை ஆழ்வார் பாடிய திருஎழு கூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல், திருவரங்கத்தமுதனார் பாடிய ராமானுஜர் நூற்றந்தாதி போன்றவை இடம் பெற்றுள்ளது.

4. நான்காவது ஆயிரம்

நான்காவது ஆயிரத்தில் நம்மாழ்வார் பாடிய திருமொழி என்னும் பிரபந்தம் இடம் பெற்றுள்ளது.

    இவ்வாறு 4000 திவ்ய பிரபந்தத்தில்  12 ஆழ்வார்கள் பாடிய 24 பிரபந்தங்கள் இடம் பெற்றுள்ளன.
********

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஊழின் பெருவலி யாவுள? - வள்ளுவர்

முன்னுரை இலக்கியங்கள் பழக்கவழக்கங்களையும், நம்பிக்கைகளையும் மனிதனின் பண்பாட்டையும்,பிரதிபலிக்கும் களங்களாக விளங்குகின்றன. பேரிலக்கியங்கள் அற...