எனது வலைப்பதிவு பட்டியல்

புதன், 15 அக்டோபர், 2025

பதினெண் சித்தர்கள்- அறிமுகம்


 சித்தமாகிய மனதை அடக்கி சிவன் ஞான அருள் பெற்றவர்கள் சித்தர்கள் என போற்றப்பட்டார்கள். அவர்கள் ஏற்றிய இலக்கியங்கள் சித்தர் இலக்கியங்கள் என அழைக்கப்பட்டன.

 தமிழ் மரபில் 12 சித்தர்கள் காணப்படுகின்றார்கள். அவர்கள் பதினெண் சித்தர்கள் என அழைக்கப்படுகிறார்கள்.

1. நந்தீசர் 

 நந்தீசர்  கைலாய பரம்பரையை சார்ந்தவர். கைலாயத்தின் காவலர் என அழைக்கப்படும் இவர் சித்தர்கள் மரபு தோன்றுவதற்கு காரணமானவர்.

2. அகத்தியர்

 கும்பமுனி, குருமுனி, பொதிகை முனி, தமிழ் மொழி என அழைக்கப்படும் அகத்தியர்  அகத்தியர் பரிபூரணம், ஞான காவியம், வாத காவியம் ஆயிரம் போன்ற நூல்களை எழுதியுள்ளார்.

3. திருமூலர்

 கைலாய பரம்பரையை சார்ந்த திருமூலர், நந்தியிடம் உபதேசம் பெற்றவர். இவர் திருமந்திரம், வைத்தியம் ஆயிரம், பெருங்காவியம் 1600 போன்ற இலக்கியங்களை படைத்துள்ளார்.

4. புண்ணாக்கீசர் 

 காயகல்பம் உண்டு அதிக நாள் வாழ்ந்த இவர் பாம்பாட்டி சித்தரின் சீடர் ஆவார். இவர் ஞானப்பால், மெய்ஞானம் போன்ற நூல்களை எழுதியுள்ளார்.

5. புலத்தியர்

 அகத்தியரின் முதல் மாணவரான இவர் சிவராச யோகி என்ற பெயர் பெற்றவர். இவர் வைத்திய வாதம் ஆயிரம், வாத சூத்திரம் 300, கர்ப்ப சூத்திரம் 300 போன்ற மருத்துவ நூல்களை எழுதியுள்ளார்.

6. பூனைக்கண்ணர்

 எகிப்து நாட்டில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்தவர் இவர்.

7. போகர் 

 போகர் காலாங்கிநாதரின் சீடர் ஆவார். இவர் தமிழகத்திலிருந்து சீனாவுக்குச் சென்று பின் தமிழகம் திரும்பியவர். பழனி முருகன் கோயிலில் நவபாஷாண சிலையை உருவாக்கியவர். இவர் போகர் 7000, போகர் 12000, சப்த காண்டம் போன்ற பல மருத்துவ நூல்களை எழுதியுள்ளார்.

8. கருவூரார் 

 கரூரில் பிறந்த இவர், கரூர் தேவர் என அழைக்கப்பட்டார். இவர் கருவூரார் வாத இலக்கியம், வைத்தியம் 500, பூஜா விதி போன்ற மருத்துவ நூல்களை எழுதியுள்ளார்.

9. கொங்கனவர் 

 போகரின் மாணவர் கொங்கணவர். இவர் கொங்கணவரின் முக்காண்டங்கள், வைத்தியம் 200, வாத சூத்திரம் 200, ஞானவெண்பா போன்ற 24 மருத்துவ நூல்களை எழுதியுள்ளார்.

10. காலாங்கிநாதர் 

 காற்றை உடலாகக் கொண்டு வாழ்ந்ததால் காலாங்கி நாதர் என அழைக்கப்பட்டார். திருமூலரின் சீடரான இவர், வைத்திய காவியம், ஞான பூஜா விதி போன்ற பல மருத்துவ நூல்களை எழுதியுள்ளார்.

11. அகப்பேய்ச் சித்தர் 

 மனதை பேயாக உருவகப்படுத்திப் பாடும் இவர் வாத வைத்தியம், பூரண ஞானம் 15 போன்ற மருத்துவ நூல்களை எழுதியுள்ளார்.

12. பாம்பாட்டிச் சித்தர் 

 பாம்பைப் பிடித்து வேடிக்கை காட்டும் இவர், மருதமலையில் விஷ வைத்திய ஆய்வுக்கூடத்தை நடத்தி வந்தார். இவர் பாம்பாட்டிச் சித்தர் பாடல்கள், சித்தர் ஆருடம் போன்ற மருத்துவ நூல்களை எழுதியுள்ளார்.

13. தேரையார் 

 அகத்தியரின் மாணவரான தேரையார், வைத்திய காவியம், ரஸவர்க்கம், பதார்த்த குண சிந்தாமணி போன்ற மருத்துவ நூல்களை எழுதியுள்ளார்.

14. குதம்பைச் சித்தர் 

 காதில் அணியும் அணிகலமான குதம்பையும் முன்னிறுத்தி பாடியுள்ளார். சமூக சீர்திருத்த கருத்துக்களை அதிகமாக இவர் பாடியுள்ளார்.

15. இடைக்காடர் 

 ஆயர் குலத்தில் பிறந்த இவர் பாடிய பாடல்கள் இடைக்காட்டுச் சித்தர் பாடல்கள் என்ற பெயரில் தொகுக்கப்பட்டுள்ளது.

16. சட்டை முனி

  கைலாயம் சென்று சிவனை வழிபடும் இவர், கம்பளத்தில் ஆன மேலாடையை எப்பொழுதும் அழிந்திருப்பதால் சட்டை முனி என அழைக்கப்பட்டார். இவர், நிகண்டு, வாதகாவியம், ஞான விளக்கம் உட்பட14 மருத்துவ நூல்களை எழுதியுள்ளார்.

17. அழுகணிச் சித்தர் 

    எப்பொழுதும் கண்களில் நீர் வழிய நிற்கும் இவர் அழுகணிச் சித்தர் பாடல்கள் 200, ஞான சூத்திரம் 23 ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.

18. தன்வந்திரி 

   நந்தீசரிடம் மருத்துவ கலைகளைக் கற்ற இவர், வைத்திய சிந்தாமணி, கருக்கிடை நிகண்டு போன்ற மருத்துவ நூல்களை எழுதியுள்ளார்.

 இவர்களைப் போலவே பல சித்தர்கள் தமிழ் மரபில் காணப்படுகின்றார்கள்.

*********

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஊழின் பெருவலி யாவுள? - வள்ளுவர்

முன்னுரை இலக்கியங்கள் பழக்கவழக்கங்களையும், நம்பிக்கைகளையும் மனிதனின் பண்பாட்டையும்,பிரதிபலிக்கும் களங்களாக விளங்குகின்றன. பேரிலக்கியங்கள் அற...